அவன் என் காதலன்
அன்பானவன்,அன்பின் அருளானவன்,
ஆசை அது பற்றறுக்கும் அரும்பானவன்,
கடலானவன், கடலின் கரையானவன்,
நான் கரையேற வந்துதவும் கலங்கரையானவன்.
அவன் என் சிவன்!
மலையானவன்! பக்தருக்கு மழையானவன்!
மண்ணோடு மண்ணாக மரமானவன்.
காற்றானவன், காற்றின் ஊற்றானவன்,
நீரானவன்! இளநீரானவன்,
உள்ளம் இனித்திடும், என் உயிர்தோழனவன்,
அவன் என் சிவன்!
பூவானவன், பூவில் தேனானவன்!
தேன் குடிக்க பறந்தோடும் வண்டானவன்!
கருவானவன், முத்தமிழின் கருவானவன்!
கனியானவன்! முக்கனி சுவையானவன்!
அவன் என் சிவன்!
புரியாதவன்! ஐம்பொறியாதவன்!
அகிலம் காத்திடும் அன்புத்தலைவனவன்!
கண்ணீரானவன், கண் நீர் ஆனவன்!
காலம் கடந்து நிற்கும் கவி ஆனவன்!
அவன் என் சிவன்!
இரும்பானவன், கரும்பில் எறும்பானவன்!
எண்ணத்தில் வந்துதிக்கும் இனிப்பானவன்!
இரவானவன், இருளின் ஒளியானவன்!
இச்சைக்கு இச்சான எச்சானவன்!
அவன் என் சிவன்!
இசையானவன்! ஏழிசையானவன்!
என்னோடு கலந்திட்ட இயல்,இசை ஆனவன்!
எட்டாடதவன்! யாருக்கும் கிட்டாதவன்!
பற்றற்ற நெஞ்சத்தில் ஒளி வீசும் பட்டானவன்!
அவன் என் சிவன்!
கண்ணோடு கண்ணாக, கவி உறங்கும் பெண்ணாக,
நான் காதல் கொண்டு நிற்கின்றேன்!
களவாடிய பொழுதோடு, கற்கண்டு நினைவோடு,
கருத்தினில் வந்தினிக்கிறான்!
நான் திண்ண கருப்பட்டி கொடுக்கிறான்!
ஏனெனில் அவன் என் காதலன்.(அவன் என்ன(சி)வன்!)
Comments
Post a Comment