இதுதான் நம்ம கலாச்சாரம்

 நீங்க விவசாயியா? அப்படின்னா அறுவடை முடிந்த கையோட ஒரு தங்க நகை எடுத்திருங்க..

நீங்க செட்டிநாட்ட சேர்ந்தவங்களா இருந்தா ஒரு வைர நகை எடுத்திருங்க...

தாய்மாமன்னு சும்மா சொல்லிக்கிட்டே இருந்தா போதுமா.. அது நிரூபிக்கனும்னா, ஒரு செயினோ இல்லையினா ஒரு மோதிரமோ உடனே போட்டிடுங்க... அப்பதான் உங்களை மதிப்பாங்க., தாய்மாமன்னு ஒத்துப்பாங்க..வெறுமனே தாய் மாதிரி பாசம் வச்சிட்டா மட்டும் போதாது!

அப்புறம் சொல்ல மறந்துட்டேன், கன்னியாகுமரி காரவங்க ஒரு ஆரமோ இல்லையினா ஒரு நெக்லஸோ எடுத்திருங்க...

கோயமுத்தூர் காரவங்க எப்போதும் அழகுதான், அவங்க தங்க நகையெல்லாம் வெயிட்டா போடமாட்டாங்க! அது அவுங்களுக்கெல்லாம் பிடிக்காது. அதனால ஒரு 4 கிராமிலையோ இல்லையினா ஒரு அரை பவுனுலையோ  ஏதாவது ஒரு தங்கம் வாங்கிடுங்க,..

தஞ்சாவூர் கார பொண்ணுங்க ஜிமிக்கியோ, கம்மலோ போட்டா அவ்ளோ அழகா இருக்கும். இதுல ஏதாவது ஒன்னு தங்கத்தில எடுத்திருங்க,..

மதுரைக் காரவங்க எப்போதுமே யாருக்குமே குறைஞ்சவங்க கிடையாது. அவங்களுக்கு மதுரை மீனாட்சியே துணை இருக்கனும்னா மரகதம் பதிச்ச ஒரு தங்கத்தை வாங்கிடுங்க..

அப்புறமென்ன? ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கவர் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.. ம்ம்.. அட ஒன்னு சொல்ல மறந்திட்டேன்.. 

பெண் பிள்ளைய பெத்த அப்பன் எல்லாருமே ஒரு காப்பு எடுத்திருங்க.. அப்பதான் நீங்க அந்த அப்பாங்கிற ஸ்தானத்திற்கே அழகு... 

அட.. இப்படியெல்லாம் நான் சொல்லலீங்க,..

மலபார் கோல்டு டைமண்ட் சொல்றான்.. இதுதான் நம்ம கலாச்சாரம், இது தான் நம்ம பாரம்பரியம் அப்படின்னு!

  


இது என்னடா புது உருட்டா இருக்கு?அது சரி இருக்கப்பட்டவன் எடுக்கப்போறான்.. இல்லாதவனுக்கு அதப்பத்தி என்ன யோசனை? இது ஒரு விளம்பரம் அவ்ளோதானே? அட ஆமாம்ல்ல....

காதுக்கு கேட்கும்  தூரத்தில் ஒரு உரையாடல்..

ஏன்க்கா.. பொண்ண கட்டிக்கொடுத்தியே தலை தீபாவளிக்கு வரும் தானே...  என்ன பலகாரம் செய்யப்போற..ம்ம் அது ஒன்னுக்குத்தான் கொரைச்சல்.. என்னக்கா என்ன ஆச்சு?

அது ஒன்னுமில்லடி பருவதம்.. பலகாரம் கேட்டா கூட செஞ்சி கொடுத்திடலாம்.. அவுங்க ஏதேதோ புது வழக்கம்லா சொல்றாங்க.. ஏன் என்னவாம்? மோதிரம் போட்டாதான் மருமகப்பிள்ளை தலைக்கு எண்ணெய் வச்சுக்குவாறாம். மாப்பிள்ளை வீட்டுல சொல்லியிருக்காங்கலாம்!   கல்யாணக்கடனே இன்னும் முடியலதானே.. இப்ப என்னக்கா பண்ண போற? பக்கத்து வீட்டு பார்வதி குழுவுல லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கா.. அவக்கிட்டதான் கேட்டிருக்கேன்.. 

நகை எங்கக்கா எடுக்கப்போற..  ஒரு நகைக் கடைக்காரன் ஏதோ கலாச்சாரம், பாரம்பரியம் அப்படின்னு விளம்பரம் பண்றான்.  அங்கதான் போகலாம்னு இருக்கேன்..  எது? அட நம்ம கார்த்தி தம்பி கூட வருமே!  எது! மலபார் கோல்டு& டைமண்ட் அதுவா? ஆங்,.. அதான்! அங்கதான்! 



இப்படித்தான் புது புது பழக்கவழக்கங்கள், புது கலாச்சாரம் தோன்றுகிறதோ? என்று உள்ளுக்குள் புன்னகைத்தவாறு அங்கிருந்து இடம் பெயர்ந்தேன்..


Comments

  1. நல்லா இருக்கு... உருட்டும்.. உரையாடலும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி