டிஜிட்டல் ஹெல்த் கார்டின் தீமைகள்( DIS ADVANDAGE OF HEALTH CARD)

 டிஜிட்டல் ஹெல்த் கார்டின் தீமைகள்(  DIS ADVANDAGE OF HEALTH CARD)


டிஜிட்டல் ஹெல்த் கார்டு சமீபத்தில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சாதகங்களை விட பாதகமே அதிகம் உள்ளது. ஹெல்த் கார்டு பாதுகாக்கப்படும் தரவுகளில்  தனிமனித மருத்துவ ஆவணங்கள் திருடு போகும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

டிஜிட்டல் ஹெல்த் கார்டில் உங்களின்  மருத்துவ சிகிச்சைகள் சார்ந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியும். இதனால் நீங்கள் மருத்துவ ஆவணங்களை மருத்துவமனைக்கு எடுத்துசெல்ல தேவையில்லை. நோயாளி ஒருவரின் ஒப்புதலோடு அவர் சம்மந்தப்பட்ட மருத்துவ ஆவணங்களை நீங்கள் பதிவேற்றம் செய்து  நிர்வகிக்க முடியும். இந்த ஹெல்த் கார்டில், ஆதார் கார்டு போன்ற வரைமுறைகள் வருமாயின் அது கீழ்கண்ட விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

*தனிமனிதனின் மருத்துவம் சார்ந்த ஆவணங்களை அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவ குழுக்கள், மருத்துவ மனைகள் கண்காணிக்க முடியும். அவ்வாறு கண்காணிக்கப்படும் போது தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது. 

*தரவுகள் திருடப்படுமாயின் நம் ஆரோக்கியம் சார்ந்த விசயங்கள் இனி மருந்து நிறுவனங்களின் விருப்பப்படியே இருக்கும். அவர்கள் தயாரிக்கும் புது மருந்துகளை நம் மீது  சோதனைக்கு உள்ளாக்கி மருந்தின் வீரியத்தை தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே இணையம் மூலம் கண்காணிப்பார்கள்.

*30 வயதை கடந்த அனைவரும் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட நேரிடலாம். 

*ஆதார்கார்டுடன், ஹெல்த்கார்டை இணைப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசின் சலுகைகள் கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.

*ஹெல்த்கார்டு காண்பித்தால் மட்டுமே இனி திருமணம் என்ற நிலை ஏற்படலாம். 

*புதுப்புது நோய்கள் தோற்றுவிக்கப்படலாம்.


                         


*காப்பீட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் திட்டங்களை அறிவிப்பார்கள். காப்பீட்டு தொகை கொடுக்க வேண்டிய சூழல் வந்தால் இது( கொரோனா போன்று) புதிய நோய் காப்பீடு திட்டத்தின் கீழ் வராது என்று கூறி திருத்தமும் செய்து கொள்வார்கள். 

*நமக்கு அடிக்கடி போன்கால் அழைப்புகள் வரக்கூடும், ஆவலோடு யார் என்று எடுத்தால் சார் நாங்கள் (ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைக் கூறி)இங்கிருந்து பேசுகிறோம்.  ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வந்திருக்கிறார். நாங்கள் உங்களுக்கு மருத்துவ கட்டணத்தில் டிஸ்கவுண்ட் தருகிறோம் உடனே வந்து பாருங்கள் என்று கூறுவார்கள்.(உதாரணம் தற்போது வரும் கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் அழைப்புகள்) இதன் மூலம் மன உளைச்சல் அதிகமாகும். 

*உங்கள் வருமானத்தில் பாதியை உங்கள் ஆரோக்கியத்திற்கு செலவிடும் சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.

*தற்போது 90 சதவீதம் வீடுகளில் நம் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்காவது நீரிழிவு நோய்(சர்க்கரை நோய்), அல்லது ரத்தக்கொதிப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். 

*தற்போது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவே போராடி வரும் சூழலில் கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.

*புது புது மருந்துகளின் கண்டுபிடிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கும். மருந்துகளின் விலை அதிகரிக்கக் கூடும்.

*உங்களின் தனிப்பட்ட அந்தரங்கள் அனைத்தும் வேறோருவர் கையில் சிக்கும் பட்சத்தில் தனி மனித சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். 

*இது போன்ற நிலை வருமாயின் இதன் தொடர்ச்சியாக உங்களின் மருத்துவ சிகிச்சைகளை நீங்களே தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகும். இதை மூன்று விதமாக பிரித்து வைத்திருப்பார்கள்.( சில்வர் கார்டு, கோல்டு கார்டு, டைமண்ட் கார்டு) பணம் இருப்பவன் மட்டுமே இந்த பூமியில் வாழத்தகுதியானவன் என்ற நிலை உருவாகும். 

*எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சூழலில்   உங்களின் மருத்துவ ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.  கடந்த 10 ஆண்டுகளாக பல தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற கார்டுகள் ரகசியமாக  பராமரிக்கப்பட்டு வருகிறது.  

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்று இதை நாம் ஒருபோதும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில் அவர்களின் கல்வி, வளர்ச்சி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சட்டம் என்பது நம் நாட்டோடு ஒப்பிடும்போது முற்றிலும் வேறு. நம் நாட்டில் தண்ணீர், மின்சாரம்  கிடைக்காமல்  இன்றும் எத்தனையோ கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி