அண்ணனுக்கு ஓர் கடிதம்
அன்பின் அழகனே!
அணில் மொழி அமுதனே!
இதயத்தின் இனியனே!
இன்பம் எழில் ஆடும் தோழனே!
வேங்கை மைந்தனே!
எங்கள் வெற்றிச்செல்வனே!
பெருமை மிகு பேரண்ணா...
பெருந்தமிழ்நாடு தவிக்கிறது...
அங்கயற்கண்ணி அருள் மொழியில்
அமுதம் பெற துடிக்கின்றாய்,
நஞ்சுண்ட நாயகனாய், நயம் இடறி தவிக்கின்றாய்!
உனை ஆட்கொண்ட உமையவளாய்
நான் இங்கு உளமாறி திளைக்கின்றேன்...!
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்த புண்ணியம் கண்ணனுக்கே!
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே..பழி போகட்டும் கண்ணனுக்கே...!
கண்ணனே காட்டினான், கண்ணனே சாட்டினான்!
கண்ணனே கொலை செய்கின்றான்!
கண்ணன் மனது கல் மனதென்றோ...
காண்டீபம் நழுவ விட்டாய்..
வேண்டாம் விஜயா, விட்டுவிடு நஞ்சை
வந்து தொட்டு விடு நெஞ்சை.
நினைவில் கொள்! இங்கு உனைக்காக்கும் கர்ணனும் நானே..!
அந்த கண்ணனும் நானே..!
Comments
Post a Comment