நாற்புறமும் தெறிக்கின்றேன்!

காதலர்கள் அரங்கேறும் கவித்துவமான இடம்,

கவி பல ஆயிரம் வந்து சொட்டும் ரசம்,

ஒற்றை அரிசியில் உலகத்தை நான் அடக்க..

உள்ளூர ஆனந்தத்தில் ஓரடி எடுத்து வைத்தேன்!

கருவாடு..., கருவாடு.., கருத்தம்மா கூவி விற்க..

பதைபதைத்த நெஞ்சோடு பரிக்குட்டி கடக்கின்றான்!

மருதாணி கையோடு, மையிட்ட கண்ணோடு,

மஞ்சதாலி மினுமினுக்க,

மஞ்சுளா தன் மன்னவன் தோள்பிடித்து முகம் சிவக்கிறாள்..

விலையில்லா சேதாரத்தில் விற்பனை அது தாராளத்தில்,

விலைமாதர் சரீர தங்கம் அதை விற்பனை செய்கின்றனர்!

காலம் அது இனித்திடும், கனவுகள் மெய்ப்படும்,

கற்பனையில் கல்லூரி மாணவர்கள்!

கலகலவென சிரிப்போடு கார்மேகன் அவன்

கடல் பார்த்து கதைக்கின்றான்!

       


முப்பது ரூபாயில் முத்தான புகைப்படம்.(போட்டோகாரர் அழைக்கின்றார்)

நான் மட்டும் தனித்திருக்க, நாயகனாய் நின்றிருக்க...

நாயகனாய் நின்றிருக்க... தி(தெ)ரு நாயகனாய் நின்றிருக்க...

நாற்புறமும் தெறிக்கின்றேன்!

கண் இமைக்கும் நேரத்தில் என் கால் தொட்டு முத்தமிட!

உடல் சிலிர்த்து விழிக்கின்றேன்! 

சிரித்த முகத்தோடு, செவ்விதழ் தேன் குலுங்க!

சிந்து பசுவின் பால் நுரையாய் கடல் அலையில் என்னவள் முகம்!


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி