அரிது! அரிது!! அரிது!!!
அரிது! அரிது! மாலையிட்டவளை மறத்தல் அரிது!
மனமாலையிட்டவளை மறத்தல் அரிது!
கண் பேசும் காவியம் அரிது!
காவியம் சொல்லும் ஓவியம் அரிது!
ஓவியம் வரைய வண்ணம் தீட்டுதல் அரிது!
வண்ணம் தீட்ட எண்ணம் தீட்டுதல் அரிது!
என்னிய எண்ணத்தை நேசித்தல் அரிது!
நேசித்த நெஞ்சத்தை யாசித்தல் அரிது!
யாசித்த நெஞ்சத்தை வாசித்தல் அரிது!
உள்ளூர ஒலிக்கும் ஓசை அரிது!
ஓசைப் படித்திடும் ராகம் அரிது!
ராகம் படித்திடும் பாவம் அரிது!
பாவம் படித்திடும் பண் இனிது!
பண் அது இசைத்துவிட்டால், மதி அது மயங்கிவிடும்! மகரந்த சேர்க்கை நடந்துவிடும்! உடல் அது வற்றிவிடும்! உயிர் அதை தொட்டுவிடும்!
வற்றிவிட்ட உடலை, தொட்டுவிட்ட உயிரை இசையவள் இரண்டற கலந்தப்பின் இசைமகளை மறத்தல் அரிது! அரிது!! அரிது!!!
Comments
Post a Comment