இரவின் அழகில் மாநகரம்!

 ஏசி கார்களின் அணிவகுப்பு

கலர் லைட்டுகளின் ஜொலிஜொலிப்பு

மசாலா தடவிய மாமிசங்கள்

லிப் லாக் தேவதைகள்

கையேந்தும் காதலன்கள்



கொசுக்கடியில் கோவிந்தன் தாத்தா,

மரத்தடியில் சிமெண்ட் காலுடன் சிறார்கள்

உறங்கப்போகும் உற்சாகத்தில் ஜொமைட்டோ ஊழியர்கள்

குடிபோதையில் ரோட்டோரம் இளவட்டங்கள்

பைக் ரைடில் சில பட்டாம்பூச்சிகள்

மழைக்கும் வெயிலுக்கும் மரம் ஒதுங்கா மகாராணி

தெருவோரம் ஐஸ்கிரீம் கடைகள்

தூக்கத்தை தொலைத்த துரியோதனன்கள்

குப்பை கிளறும் நாய்கள்

தேம்பி அழும் தேவதாசுகள்

முகம் காட்ட மறுக்கும் சந்திரன்

இரவின் அழகில் மாநகரம்!



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி