வசந்த மாளிகை

 சமீபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. சிவாஜி பற்றிய நினைவலைகளை நண்பருடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு யோசனை சிவாஜி நடித்த படங்களில் ஏதேனும் ஒன்று பார்க்கலாம்  அப்படின்னு, என்னப்படம் பார்க்கலாம் என்று நண்பரிடம் கேட்டபோது அவர் வசந்த மாளிகை படத்தை பரிந்துரை செய்தார்.

இன்றைய லவ் புரோபோஷல்களை எல்லாம் மிஞ்சிய ஒரு லவ் புரோபோஷல் அது,  பாசத்திற்கு ஏங்கும் பணக்கார வாலிபன் ஒருவன் காதல் வயப்பட தன் காதலை காவியமாக்க முனைகிறான். அதன் விளைவாக வசந்த மாளிகை கட்டி,. வண்ண விளக்குகள் அலங்கரித்து,(ஒரு குட்டி தாஜ்மஹால் போன்று) தன் காதலை தெரிவிக்கிறான். காதலை ஏற்றுக்கொண்ட காதலி சம்மதம் தெரிவிக்க காதல் மையலாகிறது..


                         


பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர.. ஓடிவரும் வண்ண ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர..

காதல் ரசம் சொட்ட, சொட்ட காதல் அரங்கேறுகிறது. 

கலைரசனை கொண்ட எந்த ஒரு ரசிகனும் அந்த பாடல் வரிகளுக்கு அடிமையாகி போவான்.. அப்படிப்பட்ட பாடல் வரிகள்


கண்ணதாசனும், பஞ்சு அருணாச்சலமும் தங்கள் கவித்துவத்தால் நம்மை சிலாகிக்க வைப்பார்கள்.


காதல் ஊடல் கொள்ள.. ஞானமும் பிறக்கிறது. தன் காதலியை நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறான்.


இரவும் பகலும் இரண்டானால்,

இன்பம் துன்பம் இரண்டானால்,

உறவும் பிரிவும் இரண்டானால்,

உயிரும் உடலும் இரண்டானால், 

உள்ளம் ஒன்று போதாது..

கண்களின் தண்டனை காட்சி வழி 

காட்சியின் தண்டனை காதல் வழி 

காதலின் தண்டனை கடவுள் வழி

கடவுளை தண்டிக்க என்ன வழி! 

ஆம் உண்மைதான்..!  ஒரு உள்ளத்தை வைத்துக்கொண்டு அனைத்தையும்  கடந்து வருவது எளிதான காரியமல்ல! உள்ளம் ஒரு குழந்தை போன்றது அதற்கு அடம்பிடிக்க, ஆசைப்பட மட்டுமே தெரியும். ஆசைப்பட்டது கிடைக்கவில்லை எனில் அழுது புரண்டு கொண்டே இருக்கும். நாம் அதை கட்டுபடுத்துவது இயலாத காரியம், ஆனால் கட்டுக்குள் கொண்டு வர முடியும். இது போன்று துன்பப்படும் நண்பர்கள் மனதை அதே வழியில் சென்று  சமாதானம் கூறி அதனை கடந்து வர முயற்சி செய்யுங்கள்.

சரி கதைக்கு வருகிறேன்.. பின் இந்த காதல் அவனுக்கு புயலாக மாற தன் இன்னுயிரை மாய்த்து கொள்ள துணிகிறான். 

             


எழுதுங்கள் என் கல்லறையில் 

அவள் இரக்கமற்றவள் என்று!

பாடுங்கள் என் கல்லறையில் 

இவன் பைத்தியக்காரன் என்று!

மரணம் என்னும் தூது வந்தது

அது மங்கை என்னும் வடிவில் வந்தது!

சொர்க்கமாக நான் நினைத்தது! இன்று நரகமாக மாறிவிட்டது..!


காதலன் விசம் குடிக்க இறுதியில் காதலி வருகிறாள், காதலனோடு இணைகிறாள். காதல் கொண்ட வாலிபனின் முகப்பாவனை ஆகட்டும், காதல் வலி ஆகட்டும், உடல் மொழி ஆகட்டும், அனைத்திலும் சிவாஜிக்கு  நிகர் சிவாஜி மட்டுமே! வாணிஸ்ரீயும் சிவாஜிக்கு நிகராக நடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

யாரேனும் டைம் கிடைத்தால் ஒரு முறை வசந்த மாளிகை படம் பாருங்கள். (குறிப்பு: காதல் காட்சிகளை முடிந்தவரை சிரிக்காமல் பார்க்க முயற்சி செய்து பாருங்கள் உங்களால் முடிகிறதா என்று பார்ப்போம்)

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி