பெண்ணே நீ வாழ்க

ஒவ்வோர் சிற்பத்திற்கும் ஒவ்வோர் கதையுண்டு.என்னுடைய சிற்ப அழகி இவளா என்று மனம் பிசைகிறது! இவளோடு முன் ஜென்மத்தில்  வாழ்ந்தது போன்ற ஓர் நினைவு!

அன்பின் இலக்கணமே, 

அடி பேரழகு பெண்ணே! 

என்னை கொள்ளை கொண்டவளே! 

மின்னலை விட ஒளிப்பொருந்திய புன்னகை உடையவளே!

உன் அழகினை புகழ்ந்து பாட தமிழில் அந்தம் போதாது.

உன் கண்களே சூரியனாக,  

நீ இமைதிறக்க, இவ்வூர் விடிகிறது. (சூரியன் உதித்து விட்டதாக மக்கள் எல்லாம் தம் பணியை தொடர்கின்றனர்.)

பெண்ணே! நின் பாதம் தொட்ட மண் எல்லாம் மலராகி வர வேண்டும்!



தென்றல் அது நீந்தி வர

தந்தானா, பாடிவர கேட்பதற்கு நானோடினேன்.

நின்னையே அது சரிகம (அவள் எங்கே என்று)  கேட்டது,

சம,.... சம,.... (சொல்லு,சொல்லு என்று) கெஞ்சியது.


ஜுலி ஜுலி நீர் அது தில்லானா  பாடியது 

பார்ப்பதற்கு நான் ஓடினேன்.

நின்னையே தக தை.. (தேடியது) என்றது 

தக திமி ( அவள் எங்கே சொல்லு சொல்லு என்று கெஞ்சியது) கேட்டது.


அங்கே ஒரு அழகான தோட்டம், 

அதில் நூறு வகையான பூக்கள்..  

அந்த பூக்கள்  எல்லாம்

என்னுள்ளே பூத்துக்குலுங்க, 

அன்பாலே ஒரு பாடல் வடித்தேன், 

அப்பாடலை ஆறேழு பேர் மெச்சக்கூடும்.  

ஏன், எல்லோரும் மெச்சினாலும், 

என் சரணத்தின் பல்லவி நீ அல்லவா?


உன் இதழில் இருந்து வார்த்தை உதிராவிட்டாலும்,  

உன் உதட்டோர புன்னகை 

வந்து கொண்டே இருக்கிறது. (என்னுள் இனித்துக்கொண்டே இருக்கிறது!) 

அந்த கம்பனும், ரவிவர்மனும் உன் பின்னால் வர 

உனை வர்ணிக்க  சாத்தியமா? நின் முன்னே மவுனமே!


அந்த ஊர்வசி, மேனகை எல்லாம்

நின் நடை அழகை கண்ட பின்னே நின் பாதம் பணிவர்.

உனை விட வேறு பேரழகி யாரடி பெண்ணே!

என் தேவலோக ராணி  நீ அல்லவா!


ராஜ வீதியிலே தேரினில் வந்த தேவதையே...

என் இருதயக் கோட்டையில் 

உனக்கான அரியணையை அலங்கரித்தேன்! 

அதில் என்னென்னவோ கனவுகள். 

அந்த கனவுக்கெல்லாம் காவலாய் நீ இருக்கிறாய்..

கட்டளையும் இடுகிறாய்!



அருகில் இருந்தாலும், அமைதிகொண்டு 

உன் இதழ் வார்த்தை உதிர்க்காமல்

கண் முன்னே இனிக்கிறாய்!   

உன் உதட்டோர புன்னகையில் உயிர் வாழ்கிறேன்! 

அடி பெண்ணே,

 நீ வாழ்க.. நீ வாழ்க! வாழ்கவே!

ஒரு சிலையை கவிஞன் காண்கிறான். அதை  கண்டவுடன்  வர்ணித்து பாடுவதாக அமைந்த பாடல். 

(மொழிப்பெயர்ப்பில் ) 


 




 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி