இனி கனவுக்கும் காசு கொடுக்கனும்

 பேஸ்புக் நிறுவனம் அதன் தாய் நிறுவனத்திற்கு மெட்டா என்று பெயர் சூட்டியுள்ளது. மெட்டா என்பதற்கு அப்பால் என்று பொருள். இனி பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா செயல்படப் போகிறது என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

மெட்டாவெர்ஸ் என்பதன் சுருக்கமே மெட்டா என்று அழைக்கப்படுகிறது. அதாவது மெய்நிகருக்கு அப்பால். டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் அடுத்த வளர்ச்சியாக நீங்கள் கனவுகாணும் புதிய உலகிற்கு விர்ச்சுவலாக உங்களை அழைத்தும் செல்லும் தொழில்நுட்ப முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதாவது நிஜ உலகில் இருந்து கொண்டே நீங்கள் கனவு உலகத்தில் பயணிக்க முடியும். கனவு உலகத்தில் இருந்து கொண்டே நிஜ உலகில் உள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ள முடியும். 

   


இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உங்களிடம் ஒரு கண்ணாடி அணிய சொல்வார்கள். உங்கள் செல்போனிலோ அல்லது கணினியிலோ தொடுதிரை வழியாக நீங்கள் விரும்பும் உலகத்திற்கு விரும்பும் மனிதரோடு செல்ல முடியும். நண்பர்களோடு நாம் சேர்ந்து கேம் விளையாடுகிறோம் அல்லவா? அது போன்று.

இந்த மெட்டா தொழில்நுட்பத்தில் உங்கள் கனவுகளில் நீங்கள் விரும்பும் அவதார்களை உருவாக்க முடியும் என்கின்றனர். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது நீங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் திடீரென்று லண்டன் செல்ல விரும்புகிறீர்களா? தொடுதிரையில் லண்டனை கிளிக் செய்தால் போதும். நீங்களும் உங்கள் நண்பரும் லண்டன் சென்று சுற்றி பார்ப்பது போன்ற ஒரு உணர்வை பெறமுடியும். நிஜ உலகில் இது சாத்தியமில்லை என்றாலும் கனவு உலகில் நிஜமாக வாழ்வது போன்ற ஒரு உணர்வை தரும். 

நீங்கள் லண்டனில் இருந்து கொண்டு வேறு ஒரு நபருக்கு கால் செய்யும் போது. உங்கள் தொடுதிரை லண்டனில் இருப்பது போன்று தெரியும். நீங்கள் கால் செய்த நண்பரின் தொடுதிரை ரியாலிட்டியாக தெரியும். கனவு உலகத்தோடு நிஜ உலகை இணைப்பது.  விளையாட்டும் அப்படித்தான் பிடித்தவரோடு பிடித்த இடத்தில் பிடித்த விளையாட்டை உங்களால் விளையாட முடியும்.

மேலும் மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவர் இந்த விர்ச்சுவல் வழியாக அறுவை சிகிச்சை செய்து பழகிக் கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் மருத்துவம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்றும் கூறுகின்றனர்.

  


இந்த தொழில்நுட்பம் தற்போது நாம் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்று அனைவரும் பயன்படுத்த இன்னும் 15 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இதற்கான சில கனவு உலகத்திற்கு செல்ல கட்டணமும் நிர்ணயம் செய்வார்கள் என்று தெரிகிறது. ஏனெனில்  மெட்டா அறிவிப்பின் படி இந்த கனவு உலகத்தில் பிடித்த இடங்களை வாங்க நீங்கள் டிஜிட்டல் காயினை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் இது ஒரு கட்டண சேவையாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது.

டிஜிட்டல் காயின் (அதாவது யாரும் உள்ளே நுழையமுடியாத ஒரு மென்பொருள் அமைப்பு )இதன் பாதுகாப்பு அம்சத்தை  கொண்டு டிஜிட்டல் காயின்(பிட்காயின்) மதிப்பை நிர்ணயம் செய்கிறார்கள். இதுக்குறித்த தெளிவான புரிதல் பெரும்பாலும் கிடைக்கவில்லை. ஆனாலும் உலகின்  அனைத்து அரசாங்கங்களும் தங்கள் நாட்டின் சார்பாக இந்த டிஜிட்டல் காயின் அடிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். 

இப்போது உள்ள தங்கத்தின் மதிப்பை போன்றே இனி வரும் காலங்களில் தங்கத்திற்கு பதில் டிஜிட்டல் காயினே மதிப்பில்  முதல் இடம் பிடிக்கும் என்கின்றனர். தற்போது டிஜிட்டல் காயினின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக இனி நிஜ உலகை காட்டிலும் கனவு உலகில் வாழப்போகிறோம். இதனால் நன்மைகள் கிடைக்குமா என்பது கேள்விகுறியே. ஆனால் நிச்சயம் இதன் மூலம் பல உயிரிழப்புகள், பிரிவுகள்,வன்முறைகள்  ஏற்படும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. (ப்ளூ வாலே, பப்ஜி போன்ற எண்ணற்ற கேம்ஸ் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகி இன்றும்  சிறார்கள் இறப்பது தொடர்கதையாக உள்ளது.)

வல்லுனர்கள் இந்த தொழில்நுட்பம் இன்னும் மனிதனை சக மனிதனிடம் இருந்து தூரமாக்கும், இதன் மூலம் மன உளைச்சல் அதிகமாகும் என்கின்றனர். 

2001-ம் ஆண்டு கிரந்தி குமார் இயக்கத்தில் வெளிவந்த  “கண்டேன் சீதையை”படத்தில் மெட்டா தற்போது அறிவித்துள்ள இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி பற்றி கூறியிருப்பார்கள்.  அதாவது நாம் இருந்த இடத்தில் இருந்தபடியே  திருப்பதி சென்று சுவாமியை தரிசனம் செய்வது போன்ற கண்டுபிடிப்பை ஹீரோ கண்டுபிடித்து இருப்பார். இந்த படத்தில் வருவது போன்ற காட்சி அமைப்பு இன்னும் சிறிது காலங்களில் நிஜமாகப்போகிறது. 

 


இப்படம் தமிழில் முதன்முதலாக வெளிவந்த வாடகை தாய் பற்றிய கதைக்கொண்ட படமாகும். வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையை பற்றி பேசும் படமாக அமைந்திருந்தது. இப்படத்தில் விக்ரம், சவுந்தர்யா நடித்திருப்பார்கள். விரும்பம் இருந்தால் ஒரு முறை பாருங்கள்.  

எது எப்படி இருந்தாலும் இனி கனவுக்கும் காசு கொடுக்கும் நிலை வரப்போகிறது. 

இனி  மதமோதல்கள், சாதிய மோதல்களின் தத்து பிள்ளையாக மனிதன் இயற்கையாக வாழ வேண்டும். கனவு உலகத்தில் வாழக்கூடாது என்று ஒரு புதிய மோதல் ஆட் ஆகப்போகிறது. 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி