கலங்காதே என் அம்மினி கலங்காதே!
பணம் மட்டும் பறித்திடுவார்,
பகல் வேசம் போட்டிடுவார்,
பற்றற்றும் இருந்திடுவார்,
பைத்தியமாய் திரிந்திடுவார்,..
மூட்டியே விட்டிடுவார்,
பகை அதை முருக்கேற்றியே விட்டிடுவார்...
கலங்காதே என் அம்மினி கலங்காதே!
மத்தாப்பூ சிரிப்போடு,
மரிக்கொழுந்து பேச்சோடு,
மதிவிசம் ஏற்றிடுவார்.
பதமாக, இதமாக, பதநீர் கள்ளாக,..
நஞ்சுமிழ்ந்த நாகமாய்,
நகங்கடித்தே துப்பிடுவார்..
நாய் கடியை மிஞ்சிடும்,
நா கடி கடிந்திடுவார்...
கலங்காதே என் அம்மினி கலங்காதே!
ஆதவனை இழிக்கின்றார்,
அறம் தவறி நடக்கின்றார்...
அணலாகி கொதிக்கின்றார்,
அடுப்பங்கரியாகி நிற்கின்றார்.
கார்முகில் விரித்தாட,
கண்முன்னே கரைந்தோட,
காலனவன் வந்திடுவான்,..
கடுங்காவல் அதை தந்திடுவான்!
கலங்காதே என் அம்மினி கலங்காதே!
Comments
Post a Comment