தூக்கம்..!
எனை மறந்துணை அழைத்தேன்
இமை மூடி இரவழைத்தேன்..
கொட்டாவி கொழுந்து விட,
உடல் கொடியெங்கும் சுகம் படர...
மகமகள்(மனம் அவள்) விழி மூட
மகிழ்வுடனே நான் துயில..
மீட்டாத மெல்லிசையாய்..
நான் மயங்கும் இன்னிசையாய்..
காதலின் பெரும் சுகமாய்,
நான் பெரும் தனிச்சுகமாய்..
துச்சமென எண்ணியே துயில் தேவி வந்தாள்..
அவள், வீணை இசைமீட்ட,
தென்றல் தாலாட்ட,
கட்டியணைத்தப்படி கரைந்து போனேன்...
Comments
Post a Comment