கிறங்கி கிடக்கிறேன்..

வட்ட நிலவெடுத்து

விட்டத்திலே நாண் அமைத்து

இணையா தண்டவாளமாய்,

இருப்புருவ மத்தியில்..

ஓடி வரும் ரயில் ஏறி ஊருக்கு போக நின்றேன்.

ஆடி அசைந்து வரும்

அழகு ஆரூர் கடந்து வரும்,

அகிலம்  அரவணைக்கும்,

அன்பு ரயிலில் நான் ஏற அனுமதி இல்லையாம்!






காரணம் நான் கேட்க,

பேரன்பு பெற வேண்டுமாம்,

பெருமை மிகு சீர் வேண்டுமாம்,

பார் புகழ் மனம் வேண்டுமாம்,

பாரதி பலம் வேண்டுமாம்! 

ஆம் உண்மைதான்! அன்பு ரயில் ஏற அனைத்தும் பெறவேண்டும்.

நானோ.. தோற்ற மயக்கத்தில் கள்ளுண்ட வண்டாய்,

கிறங்கி கிடக்கிறேன்.

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி