கடிதம்

 கண்பட்டார் நெஞ்சம் அது 

புண்பட்டு பூத்திருக்க..

இளைப்பாரும் அருமருந்தாய் 

இனியவளே நீ அமர்ந்தாய்!

எண்ணிய எண்ணமெல்லாம் 

எழுத்தினில் தான் உதிக்க.

பாமாலை நான் தொடுக்க 

பூமாலை ஏந்திச் சென்றாய்!

தூரத்து சொந்தம் எங்கோ .

துயர் கொண்ட சேதியினை..

தூக்கிய தூதுவனாய் 

தும்பியே துயில் கொண்டாய்!

              


ஈன்றவர் உனை மறந்தாலும் 

ஈகையின் பெரும் சிறப்பாய்..

இதயத்தை நீ நனைத்தாய்!

நான் மட்டும் கொஞ்சி விளையாடும் 

 நாயகி நீ ஆனாய்!

கனிணி கண் இமைக்க என் 

கண் முன்னே எரிந்து போனாய்!

எனை எறிக்க யாருமில்லை என்றே

எஸ்எம்எஸ்-ல் பிறந்து வந்தாய்!

இமோஜ் ஸ்மைலியுடனே இன்று 

எனை பார்த்து புன்னகைக்கிறாய்!

என்னோடு நீ இருந்த நினைவுகள்

அத்துணையும் என்னுள்ளே

வைத்திருக்கிறேன் இன்றளவும் பொக்கிஷமாய்!

(உலக கடித தினமாம் இன்று, கடிதத்தை நினைத்தேன் கிறுக்கி விட்டேன்)


Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி