சிரித்திடு மனமே சிரித்திடு!
நம்பினோர் கைவிடும் போதும்
நயவஞ்சகம் சூழும் போதும்
சிரித்திடு மனமே சிரித்திடு!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி
உப்பிற்கு விசமிடும் போதும்
சிரித்திடு மனமே சிரித்திடு!
தன் இச்சைக்காக இகழும் போதும்
எச்சமாக புகழும் போதும்
சிரித்திடு மனமே சிரித்திடு!
புறமுதுகிட்டு குத்தும் போதும்
சகுனியாய் வெட்டும் போதும்
சிரித்திடு மனமே சிரித்திடு!
எள்ளி நகையாடும் ஈனர்களையும்,
உயிரோடு பிணம் தின்னும் கழுகினையும்
சிரித்து பொசுக்கிடு.. உன் சிந்தையில் எரித்து நசுக்கிடு!
உன் உயரம் நீ அறிவாய்!
உன் உலகம் நீ உணர்வாய்!
உப்பில்லா கஞ்சிட்டாலும்,
உணர்வோடு அகம் மகிழும் அமிர்தம் நீ!
ஆயிரம் தடை வரினும்,
அகத்தில்லா இடர் வரினும்
அனைத்தையும் தகர்த்திடு..! புது வரலாறு தடம் பதித்திடு!
Comments
Post a Comment